Posts

Life vs Fate 4

Image
 Whatsapp, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களை பகிர்வதை நிறுத்துங்கள். நான் இப்போது எந்த ஒரு குழுவிலும் இல்லை. என் மொபைல் போனை கூட சோதித்து பார்க்கலாம்.  ஏன் தெரியுமா சில வருடங்களுக்கு முன் ராஜஸ்தானில் போர்வை விற்கும் இருவருக்கு சண்டை அதில் ஒருவன் கொஞ்சம் கிரிமினலாக யோசித்து ஒரு தகவல் பரப்புகிறான். இவன் ஒரு குழந்தை திருடன் இவன் உங்கள் ஊருக்கு வந்தால் அடித்து கொன்று விடுங்கள் என்று. அதேபோல் அவனும் இறந்தான். இந்த வழக்கில் அவனுக்கும் தண்டனை கிடைத்தது.  ஆனால் இங்கு இருக்கும் சிலரோ சமூகத்திற்கு நான் நல்லது செய்கிறேன் என்ற பெயரில் குழந்தை திருடும் கும்பல் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளது உங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளவும் என்று. ஆனால் இங்கு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்.  குழந்தை திருடுபவன் என்று நினைத்து பலரை கொலை செய்திருக்கிறது இந்த சமூகம். தமிழநாட்டிலே பல பேர் இறந்திருக்கிறார்கள். நீங்கள் பரப்பிய அந்த சமூக நல பதிவால். ஆனால் அப்படி குழந்தை திருடர்கள் யாரும் வரவில்லை. இதற்கான கர்மா எங்கே செல்லும். அந்த கதையில் வந்த கழுகை போல தன குழந்த...

Life vs Fate 3

 இங்கு நடக்கும் பல செயல்கள் அவரவருடைய கர்மா என்ற விஷயம் தான். இங்கு யாரும் நல்லவர்கள் அல்ல கெட்டவர்களும் அல்ல.  நம்முடைய கதையில் நாம் ஹீரோ. ஆனால் யாரோ ஒருவருடைய கதையில் நீ வில்லன். நல்லவர்கள் என்றல் என்ன? நமக்கு நல்லது பண்றவங்க. கெட்டவர்கள் என்றால் நமக்கு கெட்டது செய்தவர்கள் அப்படியா? இல்லை. இங்கு கர்மா என்ற கணக்கு நிலையாக உள்ளது அதை யாரும் மாற்ற முடியாது எல்லாரும் அவர் அவர் கர்மாவின் படி வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கும் நல்லதும் கெட்டதும்.  பிறர் வெற்றியை கொண்டாட பழகுங்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையை குறை கூற வேண்டாம். ஒரு சிறிய கதையை கூறுகிறேன். இந்த கர்மா என்ற கோட்பாட்டில் நீங்கள் எந்த வித தவறும் செய்யாமல் வேறு ஒருவருடைய கர்மாவை அனுபவித்து கஷ்டப்படுவது என்பதை கஷ்டப்படுவதுஎன்பதை  ஒரு கதை புத்தகத்தில் படித்த கதை ஒன்றை இங்கே copy paste செய்கிறேன் படியுங்கள்.  பாலைபிரவேசத்தின் ராஜா மிகவும் நேர்மையானவர். தன்னை நாடி வந்தவர்களுக்கு எத்தகைய உதவியும் புரிந்திடும் அன்பானவர். ஒரு முறை அவரின் ராஜ்யத்திற்கு, புகழ்பெற்ற முனிவர் ஒருவர் வந்தார். தான் கடும் பசியில் இருப்பதாகவும...

Life vs Fate 2

சரி. கர்மா எப்படி வேலை செய்யும்? நம் வாழ்க்கையில் அனைத்தும் கர்மாவை சார்ந்து தான் இருக்கிறதா? இப்போது இதைப்பற்றி தெளிவா சொல்றேன். நீ உன் வாழ்க்கையில் செய்யும் சின்ன சின்ன விஷயத்துல இருந்து பெரிய தப்பு வரைக்கும் எல்லாமே கர்மா தான். கர்மா என்பது ஒரு மிக பெரிய மாய வலை. அதை பின்பற்றி தான் உன் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் அமையும்.  ஒருநாள் நானும் என் அண்ணனும் என் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு உணவகத்துல சாப்பிட்டு கொடு இருந்தோம். அங்க ஒரு பெண்மணி பயங்கரமா சத்தம் போட்டு யாரையோ திட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு இப்போ உடனே பணம் வேணும். நீ உன் தாலிய அடமானம் வைப்பியோ இல்ல வேற ஏதாவது பண்ணுவியோ அதெல்லாம் தெரியாது. ஒழுங்கா இப்போ பணத்தை குடு. நீ குடுக்குற வரைக்கும் நான் உன் வீடு வாசலிலேயே உக்காந்துகிறேன். என்று கேட்க நானும் என் அண்ணனும் சாப்பிடும் போது கேட்டோம். அந்த பெண்மணிக்கு அந்த அம்மா பணம் தர வேண்டும் என்று நினைக்கிறன. எனக்கும் கொஞ்சம் கஷ்டமா இருந்தது சே என்ன இப்டில்லாம் பேசுறாங்க என்று.  அது நடந்து பல மாதங்கள் பிறகு ஜனவரி 2022 அன்று பகல் வேலை முடிந்து இரவு ரூமுக்கு திரும்பி கொண்டு இருந்த...

Life vs Fate

ஹாய் பிரண்ட்ஸ் என்னோட பெயர் சசிகுமார் ரொம்ப நாளா ஒரு புக் எழுதனும்னு ஆசை. நான் என்னோட வாழ்க்கைல நடந்த சில விஷயங்களையும் நான் பார்த்து தெரிஞ்சுகிட்ட சில விஷயங்களையும், அது மூலமா வாழ்க்கை என்றால் என்ன எப்படி வாழ்ந்தால் சந்தோஷமா இருக்கலாம். நம்மை சுற்றி இருக்கிற நிறைய விஷயங்கள் நாமதான் அமைக்கிறோம். அதை பத்தி இன்னைக்கு எழுத போறேன் நிறையபேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும் இல்ல கடவுள் இருக்காரா இல்லையா. ஏன் நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது. கெட்டது பண்றவன் நல்லா வாழ்கிறான். நல்லது பண்றவன் ரொம்ப கஷ்டப் படுறான். இது எல்லாம் ஏன் அப்படின்னு என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா.  சரி சுருக்கமா சொல்ல வந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்லி முடிக்கிறேன் இந்தப் பதிவை படித்து முடித்ததற்கு அப்புறம் உங்க வாழ்க்கை சிறப்பாக அமையும்.  கர்மா அப்படிங்கிற ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு இருக்கீங்களா. கர்மா எப்படி வேலை செய்யுது நம்ம வாழ்க்கையில நடக்கிற சில கெட்ட விஷயங்கள் ஏன் நடக்குது இது எல்லாத்தையும் சொல்றேன்.  எனக்கு சொந்த ஊர் சங்கரன்கோவில் பக்கம் ஒரு கிராமம் முதல்ல என்னோட வாழ்க்கைல நடந்த சில விஷயங்...