Life vs Fate 2

சரி. கர்மா எப்படி வேலை செய்யும்? நம் வாழ்க்கையில் அனைத்தும் கர்மாவை சார்ந்து தான் இருக்கிறதா? இப்போது இதைப்பற்றி தெளிவா சொல்றேன். நீ உன் வாழ்க்கையில் செய்யும் சின்ன சின்ன விஷயத்துல இருந்து பெரிய தப்பு வரைக்கும் எல்லாமே கர்மா தான். கர்மா என்பது ஒரு மிக பெரிய மாய வலை. அதை பின்பற்றி தான் உன் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் அமையும். 

ஒருநாள் நானும் என் அண்ணனும் என் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு உணவகத்துல சாப்பிட்டு கொடு இருந்தோம். அங்க ஒரு பெண்மணி பயங்கரமா சத்தம் போட்டு யாரையோ திட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு இப்போ உடனே பணம் வேணும். நீ உன் தாலிய அடமானம் வைப்பியோ இல்ல வேற ஏதாவது பண்ணுவியோ அதெல்லாம் தெரியாது. ஒழுங்கா இப்போ பணத்தை குடு. நீ குடுக்குற வரைக்கும் நான் உன் வீடு வாசலிலேயே உக்காந்துகிறேன். என்று கேட்க நானும் என் அண்ணனும் சாப்பிடும் போது கேட்டோம். அந்த பெண்மணிக்கு அந்த அம்மா பணம் தர வேண்டும் என்று நினைக்கிறன. எனக்கும் கொஞ்சம் கஷ்டமா இருந்தது சே என்ன இப்டில்லாம் பேசுறாங்க என்று. 

அது நடந்து பல மாதங்கள் பிறகு ஜனவரி 2022 அன்று பகல் வேலை முடிந்து இரவு ரூமுக்கு திரும்பி கொண்டு இருந்தேன். அப்போது ஒரு 

சத்தம். சே நீயெல்லாம் ஒரு பொம்பளையா? ஏன் பணத்தை ஏமாத்துறதுக்கு நீ வேற ஏதாவது , சீ ஏதாவது சொல்லிற போறேன் என்று கேட்டது. 

யாருன்னு திரும்பி பாத்தா அதே பெண்மணியை பயங்கரமாக திட்டி கொண்டு இருந்தார். அது அந்த பெண்மணியின் உணவகம். இவங்க வந்து கத்துனதை இரண்டு மூணு பெரு தான் பாத்தாங்க. அனால் அங்கு அவர்கள் திட்டு வாங்கியதோ அவர்கள் கடைக்கு தினமும் வரும் பத்து பதினைந்து பேர் முன்னிலையில் அதுவும் நாடு ரோட்டில். இதுக்கு பெயர் தான் கர்மா அந்த பெண்மணியின் கர்மா அவருக்கே திரும்ப வந்தது அதுவும் பத்து மடங்கு அதிகமாக. 

நாம் செய்யும் சின்ன சின்ன தவறு கூட நமக்கே நாம் செய்யும் தவறு. பிறருக்கு நீ செய்யும் நல்லது உனக்கு நீயே உன் எதிர்காலத்துக்கு செய்யும் நல்லது என்பதை மறந்து விட வேண்டாம். கர்மா என்பது நாம் செய்யும் தவறை திரும்ப நமக்கே கொடுக்கும் மாய வலை அல்ல. நாம் செய்யும் நல்ல விஷயங்களையும் நமக்கே கொடுக்கும். அதுதான் அதிர்ஷ்டம்.

யாரோ ஒருவர் சாலையில் அடிபட்டு கிடைக்க நானும் எனது அண்ணனும் அவருக்கு உதவி செய்தோம் கணியூர் சுங்கச்சாவடி அருகில். அதே போல் நாங்கள் பொங்கலுக்கு ஊர் திரும்பும்போது எங்கள் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு இருட்டான இடத்தில் கீழே விழுந்தது. 

அந்த சாலையில் வாகனங்கள் வருவதே அரிது ஆனால் எங்களுக்கு கீழே விழுந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் யாரோ ஆறு பேர் எங்களுக்கு உதவினார்கள். எங்கள் வாகனத்தை சேறு சகதியில் இருந்துஅவர்களே மேலே தூக்கி எங்களுக்கு உதவி செய்தார்கள். இந்த இடத்தில நான் அதிர்ஷ்டசாலியா? கர்மா என்ற ஒரு விஷயம் நாங்கள் செய்த விஷயத்தை எங்களுக்கு அதிசர்ஷ்டமாக திரும்ப அனுப்பியது.

வாழ்க்கையில் நடந்த பதினோரு கஷ்டங்கள் என் மனதை விட்டு நீங்காமல் இருந்தது. ஆனால் அந்த அனைத்திற்கும் நானே கர்மாவை உருவாக்கியவன். இதே போல் உங்கள் வாழ்வில் உங்களுக்கு நடந்த சில விஷயங்களையும் ஒரு பேப்பரில் எழுதுங்கள். சிந்தித்து பார்த்தால் இந்த அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களுக்கு செய்த கர்மாவாக இருக்கும்.

கர்மா என்பது கெடுப்பது மட்டும் அல்ல கொடுப்பதும் கூட. நீ அதிர்ஷ்டத்தை எதிர் நோக்கி காத்து இருக்கிறாய் ஆனால் அதற்கு நிகரகர்மா என்ற ஒரு செயலை நீ செய்வது இல்லை. இங்கு இன்னும் பலர் சாலை ஓரங்களில் உணவுக்கு வழி இன்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு திடீரென ஐநூறு ருபாய் பணமும் வாய்க்கு ருசியான நல்ல உணவும் கொடுத்தால் அதே போல் உனக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது வேறு ஒரு வழியில் அதிர்ஷ்டம் என்ற பெயரில். பணம் இருப்பவன் எல்லாரும் கெட்டவர்கள் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்.

இந்தியாவின் மிக பெரிய கோடீஸ்வரர் அம்பானி இப்போது கூட சமீபத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல உணவும் உடைகளும் கொடுத்து உதவி உள்ளார். (கூகுளில் தேடவும்) மற்றும் சுமார் 477 கோடி வரை 2017-2018 ஒரு வருட காலத்தில் அவர் ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்து இருக்கிறார். அது அவரின் கர்மாவாக வேறு வழியில் அதிக பணமாக அதிர்ஷ்டம் என்ற பெயரில் திரும்பி வருவதை பார்க்கும் பலர் என்ன நினைப்போம்? ஏழைங்க ஏழைங்களாவே இருக்கோம் அவரு மட்டும் நல்ல சம்பாதிக்காரரு என்று. முதலில் இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும். உனக்கான அதிர்ஷ்டம் உன்னை தேடி வர நீ மற்றொருவருடைய அதிர்ஷ்டத்தை உருவாக்கி கொடு. 

எனக்கு அந்த விபத்தில் நடந்த அந்த விஷயம் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்னுடைய கர்மா. அதேபோல் ஒவ்வொருவரும் செய்த செயலுக்கு ஏற்ற கர்மாவை அவர்கள் அடைவார்கள் இதுவே இந்த கர்மா என்ற கோட்பாடு. 

நான் Credit Score சோதிப்பதற்காக என்னுடைய மொபைல் என்னை வைத்து ஒரு இணையதளத்தில் கணக்கு தொடங்கினேன். அன்று முதல் எனக்கு வாரத்திற்கு இரண்டு மூன்று முறை போன் வரும் லோன் வேண்டுமா என்று. ஒரு முறை லோன் பற்றி பேசலாமா என்று யாரோ கேட்க சட்டென முகத்தில் அடிப்பது போல் கட் செய்தேன். 

அது போலவே எனக்கும் ஒரு திருமண தகவல் நிலையத்தில் இருந்து போன் வந்தது பொண்ணு பாக்குறீங்களா சார் என்று கேட்க இல்ல மேடெம் இப்போதைக்கு பாக்கல என்று பேச ஆரம்பிக்க போன் உடனே கட் ஆனது என் முகத்தில் அடித்தது போல். எனக்கு சட்டென கோவம் வர பட்டென நினைவுக்கு வந்தது கர்மா. 

சின்ன சின்ன விஷயங்கள் கூட கர்மாவாக உன்னை சுற்றி கொண்டே இருக்கும். நல்லதோ கெட்டதோ எதுவும் உன்னை விட்டு நீங்காது நீயே நினைத்தாலும். எனவே எல்லோரிடத்திலும் பொறுமையை கடைபிடி. ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் 

உனக்கான எதிர் கால நிகழ்வுகளை நீயே உனக்கு வடிவமைக்கிறாய் என்பதை மறக்க வேண்டாம் மற்றவர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். எதிர்காலத்தில் யாரோ ஒருவரால் உன் நேரம் வீணடிக்கப்படும். 

Comments

Popular posts from this blog

Life vs Fate 3

Life vs Fate