Life vs Fate 4
Whatsapp, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களை பகிர்வதை நிறுத்துங்கள். நான் இப்போது எந்த ஒரு குழுவிலும் இல்லை. என் மொபைல் போனை கூட சோதித்து பார்க்கலாம். ஏன் தெரியுமா சில வருடங்களுக்கு முன் ராஜஸ்தானில் போர்வை விற்கும் இருவருக்கு சண்டை அதில் ஒருவன் கொஞ்சம் கிரிமினலாக யோசித்து ஒரு தகவல் பரப்புகிறான். இவன் ஒரு குழந்தை திருடன் இவன் உங்கள் ஊருக்கு வந்தால் அடித்து கொன்று விடுங்கள் என்று. அதேபோல் அவனும் இறந்தான். இந்த வழக்கில் அவனுக்கும் தண்டனை கிடைத்தது. ஆனால் இங்கு இருக்கும் சிலரோ சமூகத்திற்கு நான் நல்லது செய்கிறேன் என்ற பெயரில் குழந்தை திருடும் கும்பல் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளது உங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளவும் என்று. ஆனால் இங்கு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள். குழந்தை திருடுபவன் என்று நினைத்து பலரை கொலை செய்திருக்கிறது இந்த சமூகம். தமிழநாட்டிலே பல பேர் இறந்திருக்கிறார்கள். நீங்கள் பரப்பிய அந்த சமூக நல பதிவால். ஆனால் அப்படி குழந்தை திருடர்கள் யாரும் வரவில்லை. இதற்கான கர்மா எங்கே செல்லும். அந்த கதையில் வந்த கழுகை போல தன குழந்த...