Life vs Fate

ஹாய் பிரண்ட்ஸ் என்னோட பெயர் சசிகுமார் ரொம்ப நாளா ஒரு புக் எழுதனும்னு ஆசை. நான் என்னோட வாழ்க்கைல நடந்த சில விஷயங்களையும் நான் பார்த்து தெரிஞ்சுகிட்ட சில விஷயங்களையும், அது மூலமா வாழ்க்கை என்றால் என்ன எப்படி வாழ்ந்தால் சந்தோஷமா இருக்கலாம். நம்மை சுற்றி இருக்கிற நிறைய விஷயங்கள் நாமதான் அமைக்கிறோம். அதை பத்தி இன்னைக்கு எழுத போறேன்

நிறையபேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும் இல்ல கடவுள் இருக்காரா இல்லையா. ஏன் நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது.

கெட்டது பண்றவன் நல்லா வாழ்கிறான். நல்லது பண்றவன் ரொம்ப கஷ்டப் படுறான். இது எல்லாம் ஏன் அப்படின்னு என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா. 

சரி சுருக்கமா சொல்ல வந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்லி முடிக்கிறேன் இந்தப் பதிவை படித்து முடித்ததற்கு அப்புறம் உங்க வாழ்க்கை சிறப்பாக அமையும். 

கர்மா அப்படிங்கிற ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு இருக்கீங்களா. கர்மா எப்படி வேலை செய்யுது நம்ம வாழ்க்கையில நடக்கிற சில கெட்ட விஷயங்கள் ஏன் நடக்குது இது எல்லாத்தையும் சொல்றேன். 

எனக்கு சொந்த ஊர் சங்கரன்கோவில் பக்கம் ஒரு கிராமம் முதல்ல என்னோட வாழ்க்கைல நடந்த சில விஷயங்களை நான் சொல்றேன் அதுக்கு அப்புறம் உங்களுக்கே புரியும். 

1. முதல்ல நான் என்னோட காலேஜ் படிக்கும்போது என்னால கரெக்டா மார்க் எடுக்க முடியல, வேலை கிடைப்பதற்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ என் ஊருல இருந்த ஒரு பையனை நம்பி கேரளா வரைக்கும் போனேன் ஆனா அந்த பையன் என்னை ஏமாத்திட்டான். அவர் மது அருந்திவிட்டு இருவரும் இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் கொல்லம் கடற்கரையில் இறங்கினோம். கடைசியில என் கையில காசு இல்ல. அவன் கிட்டயும் காசு இல்லைன்னு சொன்னான் ரெண்டு பேரும் சுத்தமா காசு இல்லாம அங்கு வருகின்ற சில பேர் கிட்ட உதவி கேட்டேன் அதை யாரும் எனக்கு உதவி பண்ண முன் வரல. ஒருத்தர்கிட்ட கேட்கும்போது நான் சொல்றத கூட கேட்காம என் கையில ஒரு ரூபாய் கொடுத்தார். நான் என்ன பிச்சைக்காரனா என்றே எனக்கு ரொம்ப மன வேதனையா இருந்துச்சு. ஏன் யாருக்குமே உதவி பண்ண மனசு வரலைன்னா கஷ்டப்பட்டேன். எல்லாருமே கெட்டவங்க?

2. அதன் பிறகு சென்னையில் வேலை கிடைத்தது வேளச்சேரியில். ஆனா வெறும் 5 ஆயிரம் ரூபா சம்பளம் சாப்பாடு கிடையாது. வேற வேலை கிடைச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அப்ப பஸ் ஸ்டாப்ல ஒருத்தர பார்த்தேன் ஆனா அவர் என்கிட்ட நல்ல வேலை வாங்கித் தரேன்னு சொல்லி ஏமாத்தி என்னோட மொபைல் திருட்டு போச்சு. கையில பணம் இல்ல  போனும் இல்ல. நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?

3.  காலேஜ் படிக்கும்போது ஒரு பையன் என்ன ரொம்பவே டார்ச்சர் பண்ணிட்டு இருப்பான். ஒரு நாள் அவன் டார்ச்சர் தாங்க முடியாமல் பார்க்ல உட்கார்ந்து இருந்தேன் அப்போ அங்க வந்த என்னோட பிரின்சிபல் (எப்படி வந்தாங்கன்னு எனக்கு தெரியல) ஆனா தம்பி நீ ஐடி யூனிபார்ம் போட்டு இருக்க என்னோட காலேஜில தான படிக்கிறே இங்க என்ன பண்ற என்று கேட்க பிரச்சனை பெரிசாச்சு. என்னோட கிளாஸ் டீச்சர் ஜெயக்குமார் என்ன பயங்கரமா கெட்ட வார்த்தையில் திட்டி கிளாஸ் பக்கம் வராத எனக்கு கெட்ட பெயர் எடுத்துக் கொடுத்துட்டே என்று கூறி நான் மிகுந்த மன வேதனை கொண்டேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

இன்னும் பதினோரு சம்பவங்கள் என்னோட தனியுரிமை காரணமா எழுத முடியாது. இதே மாதிரி சில கஷ்டங்கள் உங்களுக்கும் இருக்கும்.

கடைசில எல்லாத்துக்கும் காரணம் கர்மா அப்படிங்கிற ஒரு விஷயம்னு புரிஞ்சுகிட்டேன்.

நான் சொன்ன மூன்று விஷயங்களை மேல் நல்லா மனசுல எடுத்துக்கோங்க. நடந்த அந்த முதல் விஷயம் மாதிரியே 
நான் காலேஜ் படிக்கும் போது ஹாஸ்டல்ல இருந்து திரும்பி வரும்  வழியில் ஒரு அம்மா என்கிட்ட உதவி  கேட்டாங்க ரேஷன் கடையில் பொருள் வாங்க வந்தேன் என்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் யாரோ திருடிட்டாங்க எனக்கு ஏதாவது உதவி பண்ணு தம்பி ஊருக்கு போக காசு இல்ல அப்படின்னு என்கிட்ட உதவி கேட்டார்கள் ஆனா என்கிட்ட வெறும் நூறு ரூபாய்தான் இருந்தது அதுவும் என்னோட செலவுக்கு நான் அவங்களுக்கு உதவி பண்ணாம என்கிட்ட வெறும் ஒரு ரூபாய் தான் இருக்கு சாரி அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டேன். அந்தக் கர்மா என்ன முதல் விஷயத்துல அடிச்சி இருக்கு. 

இரண்டாவது விஷயம் மாதிரியே
ஒரு பெரியவரை நான் ஏமாத்தி இருக்கேன் என்னோட சின்ன வயசுல.

மூன்றாவது விஷயம் நான் ஏழாவது வகுப்பு படிக்கும்போது என்னுடைய பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற பையன் பேரு பார்த்திபன் அவனையும் ஸ்கூல் ல போட்டுக்கொடுத்து எனக்கு நடந்த அதே மாதிரி நானும் பண்ணி இருக்கேன் அந்தப் பையன. 

எல்லாம் இருக்கட்டும் இதுபோல பதினொரு சம்பவங்கள் எல்லாம் நான் இதுக்கு முன்னாடி பண்ணது. எல்லாமே எனக்கு திரும்ப நடந்துச்சு காரணம் கர்மா. 

கடவுள் இருக்காரா இல்லையான்னு தெரியாது ஆனால் மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று கடவுள் ஒரு கோட்பாடு எழுதி வைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார். நமக்கு நடக்கிற சில கஷ்டங்களுக்கு நாம யாரையும் குறை சொல்ல முடியாது

இப்ப நீங்க பண்ண வேண்டியது எல்லாம் ஒன்றுதான். சில கஷ்டங்களை ஒரு பேப்பரில் எழுதுங்க. அதே மாதிரி நீங்க யாருக்காவது பண்ணி இருக்கீங்களா என்று நல்லா யோசிச்சு பாருங்க. சில விஷயங்கள் கண்டிப்பா நடந்து இருக்கும். சில விஷயங்கள் நடக்கவில்லை அப்படின்னா உங்களை கஷ்டப்படுத்திய அவங்கள நல்லா நோட் பண்ணிக்கிட்டே இருங்க. கண்டிப்பா அவங்களுக்கும் அதுமாதிரியே நடக்கும் கண்டிப்பா. 

மதச்சண்டை, ஜாதி சண்டை எல்லாம் ஏன் நடக்குது மக்கள் ஏன் இப்படி இருக்காங்க புரியல இல்ல. அட ஒருத்தவங்க முதல்ல ஆரம்பிச்சுருப்பாங்க இவர்களுடைய பிறப்பைப் பற்றி அவதூறாக பேசி. அவர்களுடைய கர்மா அவங்கள பழி தீர்த்துக் கொள்வது கண்டிப்பா நடக்கும் ஆனா அதுக்குள்ள வேறு யாராவது இதற்குப் பழி வாங்குகிறேன் அப்படின்னு அவங்களும் புதுசா ஒரு கர்மாவ ஆரம்பிச்சுருப்பாங்க.

ஒவ்வொருவருடைய கர்மாவும் அவங்கள பழிவாங்கும். பழி தீர்க்கிறேன் அப்படி என்கிற பெயரில் நீ ஆரம்பிக்கிற ஒரு கர்மா உன்கிட்ட தான் முடியும் அதனால  நீ நீயா இரு சுத்தி நடக்கிற விஷயங்களைப் பார்த்து மனவேதனை படலாம் ஆனால் பொறுமை இழக்காதே. 

இந்த சமூகத்தில் எல்லோரும் சுயநலவாதிகளே. கொஞ்சம் சுற்றி பாருங்க தெரியும். நமக்கே தெரியாமல் நாமும் ஒரு சுயநலவாத வாழ்க்கை தான் வாழ்கிறோம்.

பேருந்தில் செல்லும்போது நாம் பேருந்துக்காக அப்போது தான் அங்கு சென்றிருப்போம். பலர் அந்த பேருந்துக்காக நமக்கு முன் இருந்தே காத்துக்கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால் பேருந்தில் நாம் முந்தி சென்று கிடைக்கும் இருக்கையில் அமர்வோம். இந்த இடத்தில் நமக்கு முன் காத்துக்கிடந்த அவர்களை பற்றி நாம் சிந்திப்பது இல்லை. 

நாம் இந்த இடத்தில் சுயநலவாதி என்பது கூட நமக்கு தெரியாது. 

அதே போல சமூக வலைதளத்தில் விஜய் அஜித் என்று சண்டை போடும் இளைஞர்கள். ஜாதிக்காகவும் மதத்துக்காகவும் சண்டை போடும் பலர். தன் அரசியல் கட்சிக்காக சண்டை போடும் பலர். கொஞ்சம் யோசித்து பார்த்தால்எல்லாரும் எவ்வளவு பெரிய சுயநலவாதிகள் என்பது தெரியும். எனக்கு விஜய் பிடிக்கும். ஆனா அவனுக்கு அஜித் பிடிக்குது அதனால நான் அவன் கிட்ட சண்டை போடுகிறேன் என்றால் அது சுயநல எண்ணம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட சுவை இருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும். அனால் இங்கு நடப்பதோ அடிதடி. ஏன்? அதே போல் மதம் என்பது வாழ்க்கை முறை. அனால் இப்போது யாரும் அதை புரிந்து கொள்ளாமல் என் வாழ்க்கை முறை சிறந்தது. நான் பின்பற்றும் கடவுளையே நீயும் பின்பற்று என்பது சுயநலவாதி எண்ணம் தானே? 

மனிதன் தவறு செய்யாமல் இருக்க உருவாக்கிய கடவுள் என்ற ஓரு விஷயம்

ஆனால் இங்கு பெண்ணியம் பேசும் பலர். ஏன் மாதவிலக்கு அப்போது கோவிலுக்கு போக கூடாது? ஏன் அம்மனுக்கு மாதவிலக்கு வராதா என்று கேட்க ஆரம்பித்து கடவுள் இல்லை என்று பேச ஆரம்பித்த உடன் இங்கே குற்றங்களும் அதிகரிக்க தொடங்கின. 

அதுதான் கடவுள் இல்லையே இருட்டுக்குள்  சுவருக்குள் நான் செய்யும் தவறு யாருக்கு தெரியும்? அதுதான் கடவுள் இல்லையே என்று தவறு செய்ய ஆரம்பித்தனர். நாம் தினம் தினம் எவ்வளவு நிகழ்ச்சிகளை பார்க்கிறோம். குழந்தைகளை கற்பழிப்பது. பெண்களை மானபங்க படுத்துவது என்று. 

மனிதன் தவறு செய்யாமல் இருக்க உருவாக்கிய கடவுள் என்ற ஓரு விஷயம் பெண்கள் உங்களுக்கு முட்டாள்தனமாக தெரிந்தால் , மனிதன் தவறு செய்யாமல் இருக்க வேறு ஏதாவது ஒரு வழியை காட்டுங்கள் அதன் பிறகு பேசலாம். கடவுள் இல்லை என்று.

பேசியவர்களும் பெண்களே , அதன் மூலம் இங்கு பாதிக்கப்படும் அனைவரும் பெண்களே , , , , இதுதான் கர்மா 

Read Life Vs Fate 2

Comments

Popular posts from this blog

Life vs Fate 2

Life vs Fate 3